--------------------------------------------------------------------------------
சாதாரணமாக புற்றுநோய் உருவாகிய பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதனை கண்டறியக்கூடிய நிலையுள்ளது. இந்நிலையில் புற்றுநோய்க்கு இட்டுச்செல்லக்கூடிய கட்டிகளை இனம்காண பிரிட்டன் அறிவியலாளர்கள் ஒரு புதியவழியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உணவு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், பெருங்குடல் புற்றுநோயாளிகளின் உயிரணுக்களை சாதாரண உயிரணுக்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். புற்றுநோயாளிகளிடம் காணப்பட்ட உயிரணுக்களில் அந்நோய்க்கு இட்டு செல்லக்கூடிய சில வேதியல் மாற்றங்களை கண்டனர்.
குடல் தொடர்பான புற்றுநோய்க்கு இட்டு செல்லுகின்ற திசுக்களில் 18 மாற்றங்களையும், புற்றுநோயாளிகளின் இதர பகுதிகளிலான சாதாரண திசுக்களின் மரபணுக்களை விட தெளிவான வேதியல் மாற்றங்களையும் மரபணுக்களில் கண்டதாகவும் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஐயன் ஜாண்சன் குறிப்பிட்டார். பெருங்குடல் புற்றுநோயாளிகளின் வயிற்று பகுதியிலான உயிரணுக்கள், உயிரணு மூலக்கூறுகளை வழக்கத்திற்கு மாறாக பெற்றிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். இவ்வாறு உயிரணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வருங்காலத்தில் புற்றுநோய்க்கு இட்டுசெல்லும் திசுக்களை இனம்கண்டு அந்நோய் வருவதை தடுக்கும் முறையை கண்டறிந்துள்ளனர்.

வேதியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் பிற முறைகளை மறுக்காதபோதும், மோசமான உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறையே இந்த வேதியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுக்களை தூண்டுகின்றன என்று ஆய்வாளர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். நம்முடைய உணவு முறைகளை கட்டுப்படுத்தி சத்தான நல்ல உணவு வகைகளை நமது வழக்கப்படுத்தி கொண்டால் ஆக்கபூர்வ நன்மை விளையும் தானே.

Source : சீன வானொலி நிலையம்
No comments:
Post a Comment